ஜகார்த்தா: எரிபொருள் விலை ஏற்றத்தால் இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள கடலோர நகரில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.
தொடர்ந்து ஏறிவரும் எரிபொருள் விலைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மீனவர்கள் கருதுகின்றனர்.
எரிபொருளுக்கு அரசாங்கம் வழங்கும் மானியம் தொடர்ந்த போதிலும் தொழில்துறை டீசல் போன்ற மானியத்திற்கு உட்படாத எரிபொருளின் விலை, கடந்த மாதத்திலிருந்து 30,000 ரூப்பியாவுக்கு (S$2) உயர்ந்துவிட்டது. விலை ஏற்றத்திற்கு முன்பு வரை ஒரு லிட்டர் டீசல் 14,000 ரூப்பியாவாக இருந்தது.
அந்த விலையேற்றம் காரணமாக மத்திய ஜாவாவில் உள்ள பட்டி என்னும் கடற்கரை நகரில் கடந்த வாரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். தங்களது படகுகளுக்குத் தேவைப்படும் டீசலின் விலையைக் குறைக்கக் கோரிக்கை விடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

