கோப்பிதியாம் உணவுக்கடை குழுமம், அதிகமானோர் வந்து செல்லும் தனது 15 கடைகளில், 80க்கும் மேற்பட்ட மின்னிலக்க ஆர்வலர்கள் மார்ச் முதல் ஜூன் வரைப்பட்ட காலத்தில் பணியில் அமர்த்தி, வாடிக்கையாளர்கள் ரொக்க அட்டைக்குப் பதிலாக செயலி முறைக்கு மாறிக்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடைக்கு வருபவர்களை , குறிப்பாக முதியோரை அணுகி அவர்கள் கைப்பேசியில் ஃபேர்பிரைஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள அந்த ஆர்வலர்கள் உதவுவர்.
அந்தச் செயலியைப் பயன்படுத்தி அனுகூலப் புள்ளிகளைப் (Linkpoints) பெறுவது, அவற்றைச் செலவிட்டு கடையில் காப்பி, உணவு போன்றவற்றை வாங்குவது எப்படி என்பதைப் அவர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.
இப்போது கோப்பிதியாம் அட்டை நடப்பில் இருக்கிறது. அந்த அட்டையில் பணத்தை நிரப்பிக்கொண்டு இந்தக் குழுமத்தின் கடைகளில் ரொக்கமாக பணம் கொடுப்பதற்குப் பதிலாக அந்த அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் . அட்டையைப் பயன்படுத்தும்போது 10% விலைக்கழிவு கிடைக்கும்.
கோப்பிதியாம் அட்டை வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் நிறுத்தப்படும்.

