மின்னிலக்க நாணய மோசடியில் ஈடுபட்டச் சந்தேகத்தின் பேரில் 32 வயது சிங்கப்பூர் ஆடவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவர் இருந்த கும்பல், கிட்டத்தட்ட 886,000 வெள்ளிக்கு மேல் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஆடவர் இருந்த கும்பல், Tidex digital என்னும் மின்னிலக்க நாணய வர்த்தக செயலி போல் ஒரு போலியான செயலியை உருவாக்கி முதலீட்டாளர்களை ஈர்த்தது.
போலியான செயலியில் நல்ல லாபம் ஈட்டமுடியும் என்று முதலீட்டாளர்கள் பலரை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.
மோசடி மூலம் கிடைத்த நிதியை சிங்கப்பூர் ஆடவர் மின்னிலக்க பணப்பைகளில் பதுக்கி வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆடவரின் குற்றச்செயல்களை ஒடுக்க பேங்காக்கில் உள்ள நீதிமன்றம் அவரை கைது செய்ய ஒப்புதல் வழங்கியது.
மோசடி கும்பலின் நடவடிக்கையை கவனித்த தாய்லாந்து காவல்துறை அந்த கும்பலில் இருந்த 13 பேரை கைது செய்தது.
அவர்கள் பேங்காக், சியாங் ராய், ரேயோங், புக்கெட் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கைதானவர்களில் இருவர் அந்தக் கும்பலின் தலைமைத்துவ பொறுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் 29 வயது சீன குடிமகள். மற்றொருவர் தாய்லாந்தை சேர்ந்த 38 வயது ஆடவர்.