நிறுவன வங்கியில் கள்ளப் பணம் பெற்ற இயக்குநருக்குச் சிறைத் தண்டனை

2 mins read
46127603-b57a-4189-be97-807f0d421e12
அம்பைட் நிறுவனத்தின் இயக்குநர் அல்சன் டோங் ‌‌‌ஷாவ் தியென், 37, மற்றோர் ஆடவரைத் தாக்கியதற்காகவும் குற்றச்சாட்டை எதிர்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவனத்தின் வங்கிக் கணக்கை அடுத்தவர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதித்ததன் விளைவாக அதன் இயக்குநருக்கு ஓராண்டு, மூன்று மாத, இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ஆலோசனை, மொத்த விற்பனை வர்த்தகம் ஆகிய சேவைகளை வழங்கும் அம்பைட் (Ambite) நிறுவனத்தின் இயக்குநர் அல்சன் டோங்க் ‌‌‌ஷாவ் தியென், 37, மற்றோர் ஆடவரைத் தாக்கியதற்காகவும் குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.

துரிதமாகப் பணம் பெற டோங் தமது வங்கிக் கணக்கை அடுத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார். அந்த வங்கிக் கணக்கில் பின் குற்றச் செயல்கள்மூலம் பெறப்பட்ட சுமார் $2.15 மில்லியன் தொகை போடப்பட்டது.

மற்றோர் ஆடவரைத் தாக்கியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற முற்பட்ட குற்றத்துடன் சம்பந்தப்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை டோங் ஒப்புக்கொண்டார். ஆடவருக்கு $4,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற முயன்றதன் தொடர்பில் அம்பைட் நிறுவனத்துக்கும் $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அம்பைட் நிறுவனம் அமைக்கப்பட்டது என்று அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

மூன்று மாதங்கள் கழித்து, திரு பாவெல் குஸ்னெட்சோவ் என்ற ஆடவர் சிங்கப்பூரில் அமைக்கப்படும் பல்வேறு நிறுவனங்களுக்கு நியமன இயக்குநர்களாக மற்ற தரப்பினர்களைப் பெற்றுத்தர முடியுமா என்று கேட்டார்.

திரு குஸ்னெட்சோவின் கூற்றுப்படி, அந்த நிறுவனங்கள் பின்னர் அவரது வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் விற்கப்படும். திரு குஸ்னெட்ஸொவ் பற்றி நீதிமன்ற ஆவணங்கள் விவரங்களை வெளியிடவில்லை.

அத்தகைய வாய்ப்புகளில் ஆர்வமுள்ளதாகத் தெரிவித்த டோங், ஒவ்வொரு வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் கைமாறும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் $2,500 வழங்கும்படி கூறினார்.

தமது நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்று டோங் அறிந்திருந்ததாகவும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்