இபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்பும் சட்டவிரோதச் சாதனங்களை விற்ற இயக்குநருக்குச் சிறை

இபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்பும் சட்டவிரோதச் சாதனங்களை விற்ற இயக்குநருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Nov 2026 - 3:15 pm

1 mins read

சட்டவிரோதச் சாதனங்களை விற்பனை செய்ததற்காக, சிம் லிம் ஸ்குவேரில் உள்ள இரண்டு நிறுவனங்களின் இயக்குநருக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரோச்சோர் கனெல் ரோடு கடைத்தொகுதியில் செயல்பட்டு வந்த ‘மைகாக்ஸ் மார்க்கெட்டிங்’ (Micox Marketing), ‘ஸிமிங் குளோபல்’ (Ziming Global) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 48 வயது ஸாங் வெய், 2022ஆம் ஆண்டில் அக்குற்றங்களைப் புரிந்ததைத் தொடர்ந்து, காப்புரிமைச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

சீன நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, மேலும் 12 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அச்சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ‘மைகாக்ஸ்’ நிறுவனத்திற்கு 37,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்ற மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ‘ஸிமிங்’ நிறுவனத்திற்கு 65,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

ஸாங்கின் குற்றங்கள் காப்புரிமை பெற்ற படைப்புகளை அணுகுவதற்கு வழிவகுக்கும் சாதனங்கள் சம்பந்தப்பட்டவை என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

இங்கிலீஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்து ஆட்டங்கள், டிஸ்னியின் ‘ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்’ (Raya and the Last Dragon) போன்ற திரைப்படங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூரில் சட்டவிரோதச் சாதனங்களை விற்பனை செய்ததற்காகச் சிறைக்கு அனுப்பப்பட்ட ஆறாவது சில்லறை விற்பனையாளர் அவர் என்று பிரிமியர் லீக், ‘அலையன்ஸ் ஃபார் கிரியேட்டிவிட்டி அண்ட் என்டர்டெய்ன்மென்ட்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்