உடற்குறையுள்ளோர் பற்றிய விழிப்புணர்வு பொதுவெளியில் பேசப்பட்டாலும் 27 வயது ஃபாத்திமா சோஹ்ரா பாதுகாப்பற்றவராக உணர்ந்தார்,
ஆனால், தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்ட பங்கேற்ற முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான யுனிஸ் ஒல்சென்னின் கருத்து அவருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் காயமடைந்த அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார்.
மற்றவர்களுடன் எப்படிப் பேச வேண்டும், எவ்வாறு நடக்கவேண்டும் போன்ற குறிப்புகள் வழங்கப்பட்டன.
முதல்முறையாக நடைபெற்ற தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்ற 11 பேரில் சோஹ்ராவும் ஒருவர்.
உடல் ஊனமுற்றவர்களிடையே தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்காக இத்தகைய திட்டத்தை பர்ப்பில் பரேட் (Purple Parade) என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 பேருக்குப் பயிற்சியளிக்க அது திட்டமிடப்பட்டுள்ளது.
பர்ப்பில் பரேடின் ஆண்டு நிகழ்ச்சியில் திட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் ஏறக்குறைய 15,000 பேர் கலந்துகொண்டனர். சன்டெக் சிட்டியை சுற்றி ஒற்றுமை பேரணியுடன் கேளிக்கை, இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

