தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளம் தலைமுறையினரின் மாறுபட்ட, சிக்கலான சவால்கள்

1 mins read
e3d48259-71c2-49a4-b929-d36d7ad83d95
மின் சிகரெட்டுகள் தவிர, இளையர்களின் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்தும் பிரதமர் பேசினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தற்போதைய இளம் தலைமுறையினருக்குத் தொழில்நுட்பம் ஆதரவாக அமைந்துள்ளதைச் சுட்டிய பிரதமர் வோங், அவர்கள் மாறுபட்ட சிக்கலான சவால்களை எதிர்கொள்வதாகச் சொன்னார்.

“ஓவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு எதிர்மறைத் தாக்கம் ஏற்படுத்தும் போக்கு இருக்கும். 1950, 60களில் ‘காமிக்ஸ்’ எனும் படக்கதைகளும் 70 களில் ‘ராக்’ இசை தீய தாக்கம் ஏற்படுத்தும் என நம்பப்பட்டது,” என்று தமது தேசிய தினப் பேரணி உரையில் கூறினார் திரு வோங்.

அவை சீரற்ற வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் தீய மேற்கத்தியப் பழக்கங்ளைக் கொணரும் என்று நம்பப்பட்டதால், அவற்றை வானொலியில் ஒலிபரப்புவதைத் தடுப்பது, ‘ஜூக் பாக்ஸ்’ கருவிக்குத் தடை, ‘லெட் செப்பெலின்’ எனும் பிரபல ‘ராக்’ இசைக்குழுவின் நிகழ்ச்சிக்குத் தடை ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொன்னார்.

தாமும் தமது நண்பர்களும் ‘காமிக்ஸ்’ வாசித்து, ‘ராக்’ இசை கேட்டு வளார்ந்தாலும் நன்றாக இருப்பதாகவும் சொன்னார். “தற்காலத்தில் இவற்றை யாரும் தீயவையாகக் கருதுவதில்லை,” எனவும் கூறினார்.

ஆனாலும் தற்போதுள்ள ‘மின் சிகரெட்டுகள்’ உள்ளிட்ட சில சவால்கள் தீவிரமானவை என்றும், அவற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

குறிப்புச் சொற்கள்