சிங்கப்பூரர்கள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு பயண ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பூசலை அடுத்து புதன்கிழமை (மே 7) அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையிலிருந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.
கூட்டமான இடங்களைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது. உள்ளூர் ஊடகங்களில் நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.
பயணிகள் https://eregister.mfa.gov.sg என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
சிங்கப்பூரர்களுக்கு உதவித் தேவைப்பட்டால் புதுடெல்லி, சென்னை, மும்பை, கராச்சி உள்ளிட்ட நகர்களில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களை அணுகலாம்.

