தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய வணிகப் பொட்டலங்களில் ‘ஸ்காட்ச் டேப்’ ஒட்டக்கூடாது

2 mins read
5a522a70-05ac-466c-b082-afdea6d8793d
பொட்டலங்கள் சார்ந்த குப்பைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணைய வணிகங்களால் ஏற்படும் குப்பைகளைக் குறைக்க புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொருள்கள் அனுப்பப்படும் பெட்டிகளை எளிதாக மறுசுழற்சி செய்ய உதவும் வகையில் புதிய வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இனி இணைய வணிகம் மூலம் வாங்கப்படும் பொருள்களின் பெட்டிகளில் ‘பபிள் ராப்’ என்று அழைக்கப்படும் நெகிழியால் ஆன பாதுகாப்பு உரை உள்ளிட்டவை இருக்காது.

133 பக்கங்களில் உள்ள வழிமுறைகளில், பெட்டிகளில் ஸ்காட்ச் டேப்’ ஒட்டக்கூடாது, பொருள்கள் பாதுகாப்பாக இருக்கப் பயன்படுத்தப்பட்ட அட்டைகளைப் பாதுகாப்பு உரையாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“புதிய வழிமுறைகள் நடைமுறைக்கு ஏற்றவாறு, உழைப்பு, செலவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, இதனால் நிறுவனங்களின் செலவுகளும் குறையும்,” என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அமைச்சர் ஏமி கோர் இது குறித்து பேசினார்.

நெகிழிப் பைகள் முதல் உணவுப் பெட்டிகள் வரை என சிங்கப்பூர் குடும்பங்களின் குப்பைகளில் மூன்றில் ஒரு பங்குக் குப்பைகள் பொட்டலம் சார்ந்த குப்பைகளாக உள்ளன.

2022ஆம் ஆண்டு தரவுப்படி, பொட்டலக் குப்பைகளில் 60 விழுக்காடு நெகிழி சார்ந்தது. மற்ற 30 விழுக்காடு தாள்களில் ஆனவை. 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி 5 விழுக்காடு நெகிழி மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது.

அதனால் பொட்டலங்கள் சார்ந்த குப்பைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 186,000 பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த ஆண்டு மட்டும் இணைய வர்த்தகப் பொட்டலங்களால் 15,900 டன் குப்பைகள் உருவானது.

குறிப்புச் சொற்கள்