தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறான சிகிச்சையால் விதைப்பையை இழந்த ஆடவர்; மருத்துவர் இடைநீக்கம்

1 mins read
b0c77982-3718-421e-8f04-19e7c2d88c8f
டாக்டர் இயோ கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் உள்ளார். - கோப்புப்படம்: பிக்சாபே

மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவரான இயோ கீ ஹாங் தமது நோயாளிக்கு தவறான சிகிச்சை வழங்கியதால் நோயாளியின் விதைப்பை நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மருத்துவரின் கவனக்குறைவு நடவடிக்கையைத் தண்டிக்கும் விதமாக அவரை சிங்கப்பூர் மருத்துவ மன்றம் ஓர் ஆண்டு இடைநீக்கம் செய்துள்ளது.

டாக்டர் இயோ கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட பதின்மவயது இளையர் (15 அல்லது 16 வயது) தமக்கு கீழ்வயிற்றில் வலி உள்ளது என்று டாக்டர் இயோவிடம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்றுள்ளார். தமக்கு விதைப்பையில் வலி இருப்பதையும் இளையர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இளையரை சோதித்த மருத்துவர் ஆபத்து ஏதும் இல்லை என்று கூறி வயிற்று வலிக்கான மருந்துகளை கொடுத்துள்ளார். நிலைமை மோசமடைய மீண்டும் ஐந்து நாள்களுக்குப் பிறகு இளையர் மருத்துவரை அணுகினார்.

பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு மருத்துவர் இயோ இளையருக்கு கிருமித்தொற்று தான் உள்ளது என்று கூறினார்.

சில நாள்களுக்குப் பிறகு ஆடவரின் நிலைமை மோசமடைய அவர் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது இளையருக்கு விதைப்பையில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் ஆடவரின் இடது விதைப்பை நீக்கப்பட்டது.

மருத்துவர் இயோ இளையருக்கு தகுந்த சிகிச்சை அளித்திருந்தால் 97.2 விழுக்காடு விதைப்பை நீக்கப்படத் தேவையில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்றுஇடைநீக்கம்