ரயில் நிலையங்களில் நன்கொடை நடவடிக்கை தொடரும்

1 mins read
8250c7c9-17e4-445a-8d29-a58ca3e9ad62
பொதுமக்கள் $2, $8, $20, $50, $88 அல்லது $100 நன்கொடை வழங்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எட்டு ரயில் நிலையங்களிலும் இரண்டு பேருந்து முனையங்களிலும் வைக்கப்பட்டுள்ள நன்கொடைத் திரட்டுகருவிகள் 2026 ஜனவரி 16ஆம் தேதிவரை அவ்விடங்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது ஈஸி-லிங்க் மற்றும் கடன் அட்டைகள்மூலம் நன்கொடை வசூலிப்புக் கருவிகள் மூலம் நன்கொடைகளை வழங்கலாம்.

‘டேப் பார் ஹோப்’ (Tap for Hope) என்னும் நன்கொடைத் திரட்டு இயக்கத்தை எஸ்எம்ஆர்டி ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறது.

திரட்டப்படும் நன்கொடைகள் எஸ்டிபி தொண்டூழிய அமைப்புக்குக் கொடுக்கப்படும். எஸ்டிபி அமைப்பு உடற்குறை உள்ளவர்களுக்கு உதவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் அமைப்பு உதவிகளை வழங்கும். அதிபர் சவால் நிதித் திரட்டு நடவடிக்கையில் இதுவும் ஒரு பகுதியாகும்.

பொதுமக்கள் திறன்பேசி, திறன்கடிகை (smartwatch) ஆகியவை மூலமாகவும் நன்கொடை செலுத்தலாம். $2, $8, $20, $50, $88 அல்லது $100 தொகைகளை அவர்கள் நன்கொடையாக வழங்கலாம்.

நன்கொடைத் திரட்டுகருவிகளில் பேநவ் (PayNow) குறியீடுகளும் உள்ளன. அவற்றை வருடியும் பயணிகள் நன்கொடை வழங்கலாம்.

நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை சிராங்கூன், புவன விஸ்தா, பாய லேபார், பூகிஸ், உட்லண்ட்ஸ், மரின் பரேட் ஆகிய ரயில் நிலையங்களில் நன்கொடைகளை வழங்கலாம்.

அதேபோல், சுவா சூ காங் மற்றும்  உட்லண்ட்ஸ் பேருந்து முனையங்களில் பொதுமக்கள் நன்கொடைகளை வழங்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

தஞ்சோங் பகார், ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையங்களிலும் சில வாரங்கள் நன்கொடைக் கருவி வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்