டௌன்டவுன் பாதை ரயில்களில் மேம்படுத்தப்பட்ட ‘எல்சிடி’ திரைகள்

1 mins read
5cc347fc-0782-4188-a0b9-9c73e8ca234f
டௌன்டவுன் வழித்தட ரயில்களில் ‘எல்சிடி’ திரைகளை மேம்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

டௌன்டவுன் வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் ‘எல்சிடி’ திரைகளை மேம்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன. மேம்படுத்தப்பட்ட ரயில்களின் சேவை ஜூலை 3ஆம் தேதி தொடங்கியது.

டௌன்டவுன் ரயில் பாதையில் செல்லும் ரயில்களுக்கு அடுத்து 25 வடக்கு-கிழக்குப் பாதையில் செல்லும் 25 ரயில்களில் ‘எல்சிடி’ திரைகள் அண்மையில் பொருத்தப்பட்டன.

வடக்கு-தெற்கு,கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் செல்லும் புதிய ரயில்களிலும் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் செல்லும் அனைத்து 91 ரயில்களிலும் இந்த நகரும் ‘எல்சிடி’ திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. 2027ஆம் ஆண்டில் குறுக்குத் தீவு ரயில் பாதையில் சேவையைத் தொடங்கும் 44 ரயில்களிலும் இந்த நகரும் எல்சிடி திரைகள் பொருத்தப்படவுள்ளன.

ரயில் துணை அமைப்புகளைப் புதுப்பிப்பது, தற்போதுள்ள நிலையான பாதை வரைபடங்களை மாற்றியமைப்பது போன்றவை இந்தத் திரைகளை மாற்றியமைக்கும் பணிகளில் அடங்கும். இந்த மேம்படுத்தப்பட்ட ‘எல்சிடி’ திரைகள் ரயில் நிலையங்களின் வருகைத் தகவல்கள், பாதை வரைபடத்துடன் ரயில் கதவுகள் எந்தப் பக்கம் திறக்கப்படும் போன்ற விவரங்களைக் காட்டும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

முன்னைய நிலையான திரைகளுடன் ஒப்பிடும்போது, இந்த மேம்படுத்தப்பட்ட திரைகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனப் பயணிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்