தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோலில் துணைப் பிரதமர் கான் வெற்றி

1 mins read
9c466263-643b-49eb-b6d4-640d9b71bcd4
பொங்கோல் குழுத்தொகுதியில் வாகை சூடிய துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி (மசெக) அணி பொங்கோல் குழுத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.

பலரும் எதிர்பார்த்தபடி, புதிதாக உருவாக்கப்பட்ட பொங்கோல் குழுத்தொகுதியில் போட்டி கடுமையாகவே இருந்தது.

ஆனாலும், மசெக அணிக்கே வெற்றி கிட்டியது. மசெகவிற்கு 55.17% வாக்குகளும் எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சிக்கு 44.83% வாக்குகளும் கிடைத்தன.

மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவில், மசெக 54% வாக்குகளையும் பாட்டாளிக் கட்சி 46% வாக்குகளையும் பெற்றன.

பாட்டாளிக் கட்சியின் நட்சத்திர வேட்பாளராகக் கருதப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஹர்பிரீத் சிங் தலைமையிலான பாட்டாளிக் கட்சியின் புதுமுக அணி, துணைப் பிரதமர் கான், மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, துணை அமைச்சர் சுன் ‌ஷுவெலிங், இயோ வான் லிங் ஆகியோர் அடங்கிய வலுவான மசெக அணியை எதிர்கொண்டது.

துணைப் பிரதமர் கானைப் பொங்கோலில் தொகுதி மாறிப் போட்டியிடச் செய்தது பலனளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் லாரன்ஸ் வோங், பொங்கோல் குழுத்தொகுதிக்கான பிரசாரக் கூட்டத்திலும் பல செய்தியாளர் சந்திப்புகளிலும் துணைப் பிரதமர் கான் சிரமமான காலகட்டங்களில் சிங்கப்பூருக்கு ஆற்றியுள்ள பங்கைப் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.

ஏற்கெனவே, மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் ஆகியோர் ஓய்வுபெற்றுள்ள நிலையில் துணைப் பிரதமர் கானையும் இழந்தால் நாட்டுக்குப் பேரிழப்பாக இருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்