தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அமெரிக்கா செல்கிறார்

1 mins read
a06f37e6-ab58-4cdc-97d1-070ac72bdab9
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வாஷிங்டனில் அமெரிக்க அமைச்சர்களையும் மூத்த அதிகாரிகளையும் சந்திப்பார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் வியாழக்கிழமையிலிருந்து (அக்டோபர் 5) அக்டோபர் 15ஆம் தேதிவரை அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு அமெரிக்கா செல்கிறார்.

பிரதமர் அலுவலகம் அந்தத் தகவலைத் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான திடமான, பன்முக உறவை வலுப்படுத்துவதே பயணத்தின் நோக்கம்.

அரிஸோனாவுக்குச் செல்லவிருக்கும் திரு வோங், அங்குள்ள சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் தளத்தைப் பார்வையிடுவார்.

பிறகு நியூயார்க் நகரில் நடைபெறவிருக்கும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முதலீட்டுக் கருத்தரங்கிலும் அவர் கலந்துகொள்வார்.

அவர் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வழிநடத்தும் புதிய நடுவத்தையும் அதன் அலுவலகத்தையும் திறந்துவைப்பார்.

வாஷிங்டனில், பைடன் நிர்வாகத்தைச் சேர்ந்த அமைச்சர்களையும் மூத்த அதிகாரிகளையும் திரு வோங் சந்திப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டங்களில், உருவெடுத்துவரும் புதிய அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துபேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்