புத்ராஜெயா: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான வரைவுத்திட்டம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படும் என மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் கூறினார்.
ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான அக்மல், இம்மாத இறுதியில் சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
உற்பத்தி, தளவாடம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுப்பயணம், எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல், நிதிச் சேவைகள், வர்த்தகச் சேவை, கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கியத் துறைகளில் முதலீடுகளை உயர்த்துவதே சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் இலக்கு.
இஸ்கந்தர் மலேசியா பொருளியல் மேம்பாட்டு வட்டாரத்தில் ஜோகூர் பாரு நகர மையம், இஸ்கந்தர் புத்தேரி, தஞ்சங் பெலேபாஸ்-தஞ்சங் பின், பாசிர் கூடாங், செனாய்-ஸ்கூடாய், செடினாக் ஆகியவையும் அடங்கும்.

