புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தை அடுத்து, அபாயகரமான முறையில் கார் ஓட்டி காயம் விளைவித்ததற்காக 34 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை நிகழ்ந்தது.
இந்த விபத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் சாலைக்கும் பெவிலியன் சர்க்கிளுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் மோட்டார்சைக்கிளும் பேருந்தும் நின்றுகொண்டிருந்ததைக் காணொளியில் பார்க்க முடிந்தது.
அப்போது அங்கு வந்த கார் மோட்டார்சைக்கிளின் பின்பகுதி மீது மோதியது.
இதில் அந்த மோட்டார்சைக்கிளோட்டி தூக்கி எறியப்பட்டார்.
தரையில் விழுந்த மோட்டார்சைக்கிளோட்டி காயமடைந்தார்.
அந்த 31 வயது ஆடவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.