மது அருந்திவிட்டு காரை ஓட்டிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் கைது

கிரேட் வேர்ல்ட் கடைத்தொகுதிக்கு அருகே நேற்று முன்தினம் மசராட்டி ரகக் காரும் மெர்சிடிஸ் காரும் மோதிக்கொண்டன. 

இதன் தொடர்பில் மது அருந்திவிட்டு காரை ஓட்டிய சந்தேகத்தின் பேரில் 42 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மசராட்டி காரின் ஓட்டுநர் என்று நம்பப்படுகிறது.

ஊட்ரம் ரோடை நோக்கிச் செல்லும் கிம் செங் ரோட்டில் நடந்த விபத்து குறித்து தங்களுக்கு நேற்று முன்தினம் இரவு 7.43 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

விபத்து தொடர்பான காணொளி ஒன்று எஸ்ஜி ரோடு விஜிலான்ட் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

அதில், கிரேட் வேர்ல்டு கடைத்தொகுதிக்கு அருகே  கிட்டத்தட்ட கவிழும் நிலையில் மெர்சிடிஸ் கார் காணப்படுகிறது. அதன் பின்னால் உள்ள வெள்ளை மசராட்டி காரின் வலது முன்பக்கம் நசுங்கிய நிலையில் இருக்கிறது.

விபத்தையடுத்து 38 வயதும் ஆறு வயதும் நிரம்பிய இரு பயணிகள் மருத்துவமனைக்குச்  செல்ல மறுத்துவிட்டதாகக் காவல்துறை கூறியது. அவர்கள் மெர்சிடிஸ் காரில் பயணம் செய்தவர்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

பயணிகளில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர். 

காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது. 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!