சைக்கிளோட்டி கொல்லப்பட்ட விபத்தில் வாகனமோட்டி போக்குவரத்துக்கு எதிர்திசையில் வந்தார்: மரணவிசாரணை அதிகாரி

1 mins read
953adac9-8f0d-4470-a7fd-5079f988f24d
அரச நீதிமன்றங்கள். - கோப்புப் படம்

நிக்கல் நெடுஞ்சாலையில் சைக்கிளோட்டியான திரு பஸ்ரா ராஜன் சிங்கை மோதி, அவர் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் திரு டான், போக்குவரத்துக்கு எதிர்திசையில் வாகனம் ஓட்டியதாகவும் மதுபோதையில் இருந்ததாக நம்பப்படுவதாகவும் மரண விசாரணை நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்தது.

திரு பஸ்ரா ராஜன் சிங் மரணம் குறித்த விசாரணை புதன்கிழமை இடம்பெற்றது. பிரிட்டனை சேர்ந்த 45 வயது திரு சிங், 2023 டிசம்பர் 19ஆம் தேதி அதிகாலையில் நிக்கல் நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அச்சாலையில் போக்குவரத்துக்கு எதிர்திசையில் ரோச்சோர் நோக்கி ஒரு வாகனம் செல்வதை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கேமரா காட்சிகள் காட்டின.

ஒரு வளைவுக்கு அருகில் மோதல் நிகழ்ந்தது. திரு சிங், காருடன் மோதுவதைத் தவிர்க்க முயன்று முடியாமல் போனதைக் காட்சிகள் காட்டின.

நேருக்கு நேர் மோதிய விபத்தில், திரு சிங் தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அன்றே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுமுன் “ஒரு கணம் கண் அசந்து விட்டதாக” திரு டான் கூறியதாக விசாரணை அதிகாரி கூறினார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக திரு டான் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்