புக்கிட் தீமா விரைவுச்சாலையில் போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டியதாக நம்பப்படுபவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தேசிய சேவையாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இத்தகவலை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) உறுதிப்படுத்தினார். அச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) நிகழ்ந்தது.
அந்த ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டு தீவு விரைவுச்சாலையை நோக்கிய புக்கிட் தீமா வுரைவுச்சாலைப் பகுதியில் காரை ஓட்டி செவ்வாய்க்கிழமை மாலை 5.35 மணியளவில் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.


