பிடோக் நார்த் பகுதியில் 83 வயது ஆடவர் ஓட்டிய கார் சறுக்கிச் சென்று சாலையோரப் புல்தரை, தடுப்புகள் மீது ஏறியது.
சம்பவம் குறித்து வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் ஆடவர் சுய நினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அவ்விபத்து பிடோக் நார்த் அவென்யூ 3ஐ நோக்கிச் செல்லும் பிடோக் நார்த் ஸ்திரீட் 1இல் நடந்தது.
விபத்து குறித்த படங்கள் சமூக ஊடகத்தில் பரவின. அதில் பழுப்பு நிற கார் ஒன்று சாலையோரத் தடுப்புகளை உடைத்து புல் தரையில் நிற்பதைக் காணமுடிந்தது.
காரின் முன்பகுதியும் இடப்பக்கமும் சேதமடைந்து காணப்பட்டன.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

