தோ பாயோவில் விபத்து: போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதிய கார்

தோ பாயோவில் விபத்து: போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதிய கார்

1 mins read
358fab74-6b30-4e9a-983b-da05861c0c25
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

தோ பாயோ ஈஸ்ட், லோரோங் 6 தோ பாயோ ஆகியவற்றுக்கு இடையிலான சாலைச் சந்திப்பில் திங்கள்கிழமை (டிசம்பர் 12) காலை கார் ஒன்று போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோதியது.

இதைத் தொடர்ந்து 'மெர்சிடிஸ் பென்ஸ்' ரக காரை ஓட்டிய 57 வயது ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து காலை 9.38 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த கார் நடைபாதை மேலேறி போக்குவரத்து விளக்குக் கம்பத்தை இடித்த பின்னர் நின்றது. விபத்தினால் அருகிலிருந்து கம்பி வேலி சேதமடைந்தது. விபத்துக்குள்ளான காரின் படம் சமூக ஊடகங்களில் பரவியது.

கார் ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.