புக்கிட் பாத்தோக்கில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) 54 வயது கார் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
இது பற்றிக் கூறிய காவல்துறை புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 31ல் நடந்த விபத்து குறித்து தங்களுக்கு காலை 11.10க்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
இந்த விபத்தில் எவருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் போதைப் பொருள்கள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. .
கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் போதைப் பொருள் உபகரணங்கள், மின்சிகரெட் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அறியப்படுகிறது.
இதில் போதைப் பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு மாற்றிவிடப்பட்டன. மின்சிகரெட் தொடர்பான குற்றச்செயல் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

