சிங்கப்பூரில் இளையர் ஒருவர் வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாமல் வேனை ஓட்டிப் பெரும் விபத்தை ஏற்படுத்தினார்.
வீவர் சியாம் செங் ஜி என்னும் 20வயது இளையரின் நடவடிக்கையால் அவருடன் சேர்ந்து பயணம் செய்த நபர் விபத்தில் மாண்டார்.
சியாம்மீது புதன்கிழமை (செப்டம்பர் 17) குற்றஞ்சாட்டப்பட்டது.
சியாம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி காலை 7.40 மணிவாக்கில் தீவு விரைவுச் சாலையில் மைக்கல் ஓங் வீ சியோங் என்னும் 21 வயது நபருடன் வேனை ஓட்டினார்.
வாகனத்தைக் கவனம் இல்லாமலும் அலட்சியமாகவும் ஓட்டிய சியாம் லாரி ஒன்றின்மீது மோதினார். இதில் வேன் தலைகீழாகக் கவிழ்ந்தது. முன் இருக்கையில் இருந்த திரு ஓங் கழுத்தில் முறிவு ஏற்பட்டு மாண்டார்.
அந்த விபத்தின்போது சியாமிற்கு 18வயது.
காவல்துறையின் விசாரணையில் சியாம் ‘டெலிகிராம்’ செயலி வழி வாகன பகிர்வுச் சேவையை வழங்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
சியாம் தரப்பிடம் வழக்கிற்கு முந்தைய கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த மாதம் 24ஆம் தேதி நடக்கவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
அதே தவற்றை மீண்டும் செய்தால் அந்த நபருக்கு ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, $20,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். .