போதைப்பொருள் புழங்கியதாக 76 பேர் கைது

போதைப்பொருள் புழங்கியதாக 76 பேர் கைது

1 mins read
f8824e8d-ef18-4d6b-a254-1801d61d3c87
கைது செய்யப்பட்டவர்களில் 15 வயது மாணவரும் ஒருவர். சோதனையில் 7,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. - படம்: மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
Google News Preferred Icon

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 வயது மாணவரும் ஒருவர். சோதனையில் 7,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

97 கிராம் கஞ்சா, 49 கிராம் ‘ஐஸ்’, 7 கிராம் போதைமிகு அபின் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

ஜூன் 15 முதல் ஜூன் 19ஆம் வரை பூன் லே, கேலாங், ஆர்ச்சர்ட், சிராங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்கைதுசோதனை