போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நவம்பர் 29ஆம் தேதி ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரரான அவருக்கு வயது 60.
கத்தி வைத்திருந்த அந்த ஆடவரின் வீட்டிலிருந்து ஏறக்குறைய 2.395 கிராம் ஹெராயின், 772 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த ஆடவரின் வீட்டிற்கு நவம்பர் 29ஆம் தேதி காலை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றபோது ஆடவர் கதவைத் திறக்க மறுத்தார். எனவே அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே நுழைய நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு ஏறத்தாழ $273,000 என்று கூறப்பட்டது.
அவரையும் சேர்த்து மொத்தம் 54 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 24ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டோரில் ஆக இளையவர் சிங்கப்பூரரான 16 வயதுச் சிறுமி.
தொடர்புடைய செய்திகள்
ஆறு நாள் நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு $286,000 என்று தெரிகிறது.
விசாரணை தொடர்வதாக.மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது.