தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப் பொருள் தொடர்பான நாடகம் மேடையேற முடியாது: ஐஎம்டிஏ

2 mins read
d7314a45-a4c7-42fb-b0cb-7aced490c2e9
வைல்ட் ரைஸ் நிறுவனம் திருத்தி அனுப்பிய கதையை நிறைவேற்ற தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப் பொருள் புழக்கத்தைக் கவர்ச்சியான ஒன்றாகக் காட்டியதற்காக வைல்ட் ரைஸ் (Wild Rice) நாடக நிறுவனத்தின் படைப்பு மேடையேறுவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மிச்செல் ஃபாங் என்பவரின் எழுத்தில் உருவான ஹோம்பார் (Homepar) என்ற மேடை நாடகம் தற்போதிருக்கும் அமைப்பில் மேடை ஏற முடியாது என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் உள்துறை அமைச்சும் ஜூன் 20ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிட்டன.

ஏப்ரல் 21ஆம் தேதி சமர்பிக்கப்பட்ட கதையுடன் ஒப்பிடும்போது ஜூன் 5ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம் செய்யப்பட்ட கதை மாறுபட்டுள்ளதாக அறிக்கை சொன்னது.

முன்னதாகக் கொடுக்கப்பட்ட எழுத்து வடிவம் நிபந்தனைகளுக்கு ஏற்ப இருந்ததோடு ஆர்18 (R18) தரநிலையின்கீழ் மேடையெற்றப்பட முடியும்.

ஆனால் திருத்தம் செய்யப்பட்ட கதை, கலைகளுகான சட்டத்தை மீறியிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

“புதிய கதை போதைப் புழக்கத்தைக் கவர்ச்சியுள்ளதாகக் காட்டுவதோடு மத்திய போதை ஒழிப்புப் பிரிவு அதிகாரி மறைமுகமாகப் போதைப் புழங்கிகளைத் தற்காப்பதை முன்னிறுத்துகிறது” என்று அறிக்கை கூறியது.

அது சிங்கப்பூரின் போதை ஒழிப்புக் கொள்கையைக் கீழறுப்பதுடன் மத்திய போதை ஒழிப்புப் பிரிவின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் குலைக்கிறது என்றது அறிக்கை.

எனினும் ஹோம்பார் நாடகம் போதைப் புழக்கத்தைக் கவர்ச்சியான ஒன்றாகக் காட்டவில்லை என்று வைல்ட் ரைஸ் நிறுவனம் கூறியது.

ஹோம்பார் போதைப் புழக்கத்தை ஆதரிக்கவோ முன்னிறுத்தவோ செய்யாது என்று நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.

வைல்ட் ரைஸ் நிறுவனம் ஏப்ரல் 21ஆம் தேதி சமர்பித்த கதைக் களத்துக்குத் திரும்ப மறுத்துள்ளதால் அதை மேடையேற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் குறிப்பிட்டது.

வைல்ட் ரைஸ் நிறுவனம் போதைப் பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் உறுதியான நிலைப்பாட்டை மதிப்பதாகச் சொன்னது.

இருப்பினும் கலைகளுக்குச் சிக்கலான விவகாரங்களை ஆராயும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக நிறுவனம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்