போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

1 mins read
54959416-cc52-4549-9512-29ca1cc99516
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிட்டத்தட்ட 490 போதைப் பித்தர்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவைப்படும் அளவாகும். அதன் தோராய மதிப்பு $135,000க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

கிட்டத்தட்ட 2.8 கிலோ கஞ்சா உட்பட பல்வகை போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) ரெட்ஹில் வட்டாரத்தில் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிட்டத்தட்ட 490 போதைப் பித்தர்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவைப்படும் அளவாகும்.

அதன் தோராய மதிப்பு $135,000க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கைது செய்யப்பட்ட ஆடவர்களுக்கு 37 மற்றும் 44 வயது.

காருக்கு அருகில் அவர்கள் இருவரும் நின்றுகொண்டிருந்தபோது பிடிபட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வியாழக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தது.

காருக்குள் இருந்த கிட்டத்தட்ட 901 கிராம் கஞ்சா, 50 கிராம் ‘ஐஸ்’ வகை போதைப்பொருள், 16 கிராம் கெட்டமின், 10 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிறகு அருகில் இருந்த வீட்டிலிருந்து மேலும் பல போதைப்பொருளுடன் 36 மின் சிகரெட் சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன

ஆடவர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்