மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு செப்டம்பர் 17ஆம் தேதியன்று நடத்திய அதிரடிச் சோதனையில் ஏறத்தாழ $330,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ஒரு வாரத்துக்கு 1,480 போதைப் பித்தர்களுக்குத் தேவையான அளவு என்று அதிகாரிகள் கூறினர்.
செப்டம்பர் 17ஆம் தேதி காலை எங்கர்வேல் லேன்னுக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பேட்டையின் வாகன நிறுத்துமிடத்தில் 26 வயது ஆடவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் 32 கிராம் ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் இருந்தது.
அதே நேரத்தில் அந்தக் குடியிருப்புப் பேட்டையில் உள்ள வீடு ஒன்றில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அங்கு இருந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வீட்டில் இருந்த பல்வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கார் ஒன்றில் இருந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரடிச் சோதனை நடத்தப்பட்ட வீட்டில் மூன்று சிறுவர்கள் இருந்தனர்.
அவர்களைத் தற்போது அவர்களது உறவினர்கள் பார்த்துக்கொள்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.


