சாலை விபத்துக்கு முன்னர் தாம் சிறிய கண்ணாடிக் குவளையில் பீர் அருந்தியதாகக் கூறிய சோங் சீ கியோங், 52, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு நான்கு அல்லது ஐந்து புட்டிகள் பீர் மட்டுமே அருந்தியதாகச் சொன்னார்.
பின்னர் கதையை மாற்றிக்கொண்ட அவர், விபத்துக்குப் பிறகு வீட்டில் தாம் 10 புட்டிகள் பீர் அருந்தியதாகக் கூறினார்.
அவர் என்னதான் கூறினாலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும் கவனக்குறைவின்றி வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
சோங்கிற்கு 10 வாரச் சிறைத் தண்டனையும் $19,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதையும் தண்டனையையும் எதிர்த்து சோங் மேல்முறையீடு செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் அக்டோபர் 4ஆம் தேதி அதை நிராகரித்தது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பது இது மூன்றாவது முறை.

