துவாஸ் சோதனைச்சாவடியில் பிப்ரவரி 12ம் தேதி வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகள் நிறைந்த 13,000க்கும் அதிகமான அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த அட்டைப்பெட்டிகள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் லாரி மூலம் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
லாரியை 26 வயது மலேசிய ஆடவர் ஓட்டியதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கிட்கிழமை (பிப்ரவரி 17) கூறியது.
லாரியில் கண்ணாடி ஜாடிகள் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதை ஒளி ஊடுருவி சோதனை செய்து பார்த்தபோது சந்தேகம் எழுந்தது.
அதிகாரிகள் சோதனையிட்டதில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 13,035 அட்டைப்பெட்டிகளும் 9,768 சிகரெட் பாக்கெட்டுகளும் லாரியில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அவை கண்ணாடி ஜாடிகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.