தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்; இரு ஆடவர்கள் கைது

1 mins read
e73c8315-21c8-4874-808e-86c30fe766ca
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் பங்ளாதே‌‌ஷைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு 36, 37 வயது என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பாக ஆடவர் இருவர், ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் பங்ளாதே‌‌ஷைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு 36, 37 வயது என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் துவாஸ் பகுதியில் சோதனை நடத்தியபோது அவர்கள் சிக்கினர்.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட மொத்தம் 2,071 அட்டைப் பெட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

$292,712க்கும் அதிகமான வரியை அவர்கள் செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றத்திற்கு துணையாக 2 லாரிகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

வரி ஏய்ப்புக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, வரி செலுத்தப்படாத தொகையைவிட 40 மடங்கு அதிக அபராதம், ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தக் குற்றத்துக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

குறிப்புச் சொற்கள்