சிராங்கூன் சென்ட்ரல் - அப்பர் சிராங்கூன் ரோடு சாலைச் சந்திப்பில் மின்சைக்கிளில் சென்ற 41 வயது மாதை வண்டி ஒன்று மோதித் தள்ளியது.
அதிர்ஷ்டவசமாக, அம்மாது கடுமையான காயங்களின்றித் தப்பினார்.
சிவப்பு விளக்கு எரிந்தபோதும் அந்த மாது மின்சைக்கிளில் சாலைச் சந்திப்பைக் கடந்துசென்றதை, ரோட்ஸ்.எஸ்ஜி வெளியிட்ட காணொளி ஒன்றில் காணமுடிந்தது.
சாலைச் சந்திப்பின் இறுதியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மஞ்சள் நிற வண்டி ஒன்று மின்சைக்கிளின் பின்புறத்தை மோதியது.
வண்டி மோதிய வேகத்தில், அந்த மாது சாலையில் தூக்கி எறியப்பட்டார்.
அதன் பிறகு சாலையில் சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு பின்னர் தானாக எழுந்துநின்ற அவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விசாரணை தொடர்வதாகக் காவல்துறையினர் கூறினர்.