விபத்து தொடர்பாகக் கைதான 29 வயது ஓட்டுநரிடம் மின்சிகரெட் சாதனங்கள்

விபத்து தொடர்பாகக் கைதான 29 வயது ஓட்டுநரிடம் மின்சிகரெட் சாதனங்கள்

1 mins read
ffddb7df-991c-45ce-b70e-1dca73a75361
இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: SGRV FRONT MAN/ஃபேஸ்புக்

சிங்கப்பூரின் தஞ்சோங் பகார் அருகே கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 7) இரவு நிகழ்ந்த வாகன விபத்து தொடர்பில் 29 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து இரண்டு மின்சிகரெட் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் காவல்துறை கூறியது.

கேன்டன்மென்ட் ரோட்டுக்கும் நியூ பிரிட்ஜ் ரோட்டுக்கும் இடையில் இரண்டு கார்கள் சிக்கிய விபத்து நிகழ்ந்ததாக சனிக்கிழமை இரவு 9.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆடவர், போதுமான கவனம் இன்றியும் போதைப்பொருள் உட்கொண்ட நிலையிலும் வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது என்றும் அது குறிப்பிட்டது.

மின்சிகரெட் தொடர்பான குற்றம் என்பதால் அதுகுறித்து சுகாதார அறிவியல் ஆணையத்திடம் காவல்துறை தெரிவித்தது.

இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை செல்ல அவர் மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்