தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாசகர் குரல்: மின்சிகரெட் விநியோகம்

1 mins read
5feef497-f5b7-4b0f-919c-f45dfb447a74
மின்சிகரெட்டுகள் - கோப்புப் படம்

சிங்கப்பூரில் மின்சிகரெட் விநியோகம் அதிகரித்து வருகிறது என்ற செய்தியைப் படிக்கும்போது மிகவும் கவலையாக உள்ளது.

ஒரு நபர் ஒரே நாளில் கிட்டத்தட்ட 3 டன் மின்சிகரெட்டுகளை விநியோகித்தார், மின்சிகரெட் விற்பனையில் ஈடுபட்டதாக நம்பப்பட்ட ஆடவர் காரில் தப்பியோட முயன்றபோது கைது, ஒரு குடியிருப்பு வீட்டில் அதிக அளவில் மின்சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன போன்ற செய்திகள் கவலை அளிக்கின்றன.

அதைவிட ஆபத்தானது என்னவென்றால் இப்போது மின்சிகரெட்டுகளில் போதைப் பொருள் திரவம் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்திதான்.

நமது இளைய தலைமுறையினரை நாம் இழக்கும் முன் இதை நிறுத்தவேண்டும்.

மின்சிகரெட் விநியோகம் ஏன் அதிகரித்து வருகிறது? ஏன் அவர்கள் அதைத் துணிந்து செய்கிறார்கள்? கடுமையான தண்டனை இல்லாததால் அப்படி இருக்கலாம் என்பது என் கருத்து.

மேற்கண்ட குற்றங்களுக்கு $25,000 அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நமது குடிமக்களின் இழப்பில் பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளுக்கு இது ஒன்றுமே இல்லை.

இதைத் தடுக்க மின்சிகரெட் விநியோகம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இளைய தலைமுறையைக் காக்க வேண்டும்.

என்றும் அன்புடன், ஜோதிநாதன் மாணிக்கவாசகம்

குறிப்புச் சொற்கள்