தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் தடுப்பு முயற்சி: பொதுப் போக்குவரத்தில் தீவிரப்படுத்தப்படும் அமலாக்கப் பணி

2 mins read
b474a3dd-7627-4083-a93d-4ebae171f25d
எம்ஆர்டி நிலையங்களில் மின்சிகரெட் தடுப்பு அறிவிப்புப் பலகைகள் வைப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் - படம்: ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ்

பொதுப் போக்குவரத்து தொடர்பான இடங்களில் மின்சிகரெட் பழக்கத்தைத் தடுக்கும் முயற்சியில் நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.

பொதுப் போக்குவரத்து தொடர்பான இடங்களில் மின்சிகரெட் பிடிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் மின்சிகரெட் பிடித்து போதையுடன் காணப்பட்டால் காவல்துறையினர் அழைக்கப்படுவர் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“பொதுப் போக்குவரத்து தொடர்பான இடங்கள் பாதுகாப்புடனும் புகைபிடித்தல் அற்ற இடமாகவும் இருப்பதை உறுதி செய்ய நிலைய ஊழியர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுகின்றனர். மின்சிகரெட் பிடிப்பவர்கள் அவ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படுவர். அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்படும். மின்சிகரெட் பிடித்து போதையுடன் காணப்படுபவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர்,” என்று ஆணையம் தெரிவித்தது.

அண்மையில் வெளியிடப்பட்ட காணொளிப் பதிவுகளில் தேசிய சேவையாளர், பதின்மவயதினர், பெண் ஆகியோர் பொதுப் பேருந்து மற்றும் எம்ஆர்டி நிலையங்களில் மின்சிகரெட் பிடிப்பதைக் காண முடிந்தது. மூவரும் போதையுடன் காணப்பட்டனர்.

வேறொரு சம்பவத்தில், ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று லேக்சைட் எம்ஆர்டி நிலையத்தில் ஆடவர் ஒருவர் எஸ்எம்ஆர்டி ஊழியர் ஒருவரைத் தள்ளும் காட்சி காணொளியில் பதினாவது. அதற்கு முன்னதாக அவர் மின்சிகரெட் பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் மின்சிகரெட் பிடிப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்பதை பயணிகளுக்கு எஸ்எம்ஆர்டி திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 18))ஃபேஸ்புக் மூலம் நினைவூட்டியது. மேலும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் மின்சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

தமது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இடங்களில் மின்சிகரெட் பிடிக்கும் குற்றத்தில் ஈடுபட்டால் அது சகித்துக்கொள்ளப்படாது என்றும் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க தயக்கம் காட்டப்படாது என்றும் எஸ்எம்ஆர்டி கூறியது.

எம்ஆர்டி நிலையங்களில் மின்சிகரெட் தடுப்பு அறிவிப்புப் பலகைகள் வைப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் எஸ்ஆம்ஆர்டி யின் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அதில், மின்சிகரெட் பிடித்தால் அதிகபட்சம் $2,000 அபராதம் விதிக்கப்படும் என்று பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்