தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

5வது முறையாக போட்டி நிறைந்த களமாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி

2 mins read
f4d551bc-6c81-4550-aed9-0cf08280bfd4
ஏப்ரல் 6ஆம் தேதி ஹார்ட்பீட்@பிடோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ், நாடாளுமன்றத் துணை நாயகர் ஜெசிக்கா டான், எம்.பி. ஷெரில் சான், கோ பெய் மிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த நான்கு தேர்தல்களில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி முக்கிய தேர்தல் களமாக இருந்துள்ளது. வருகின்ற தேர்தலிலும் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் போட்டி நிறைந்த களமாக இருக்கப் போகிறது.

இவ்வாண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சி 5வது முறையாக பாட்டாளிக் கட்சியுடன் மோதுகிறது.

கடந்த தேர்தலில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் தற்போதைய துணைப் பிரதமரான ஹெங் சுவீ கியாட் தலைமையிலான மசெக அணி 53.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இது, 2015ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற 60.7 விழுக்காட்டைவிடக் குறைவு.

2015ல் மக்கள் செயல் கட்சியின் செல்வாக்கு ஓங்கி இருந்தது. அந்த ஆண்டில் அக்கட்சிக்கான மக்களின் வாக்கு பத்து விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்து 69.9ஆக இருந்தது.

2011ஆம் ஆண்டில் அல்ஜூனிட் குழுத் தொகுதியை மக்கள் செயல் கட்சி இழந்தபோது ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியிலும் அக்கட்சியின் வாக்கு 2006ஆம் ஆண்டிலிருந்து ஒன்பது விழுக்காட்டுப் புள்ளிகள் சரிந்து 54.8ஆக இருந்தது.

தற்போது இந்தக் குழுத் தொகுதியில் மரின் பரேட் தொகுதியில் இருந்த ஜூ சியாட் வட்டாரம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தனித்தொகுதியாக இருந்த ஜூ சியாட்டில் 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி குறுகிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் மீண்டும் பரபரப்பான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடோக்கின் பெரும் பகுதியையும் சிமெய், சிக்லாப் ஆகியவற்றை உள்ளடக்கிய ஈஸ்ட் கோஸ்ட் ஆகச் சிறிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாகும். இங்கு 150,691 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், சாய் சீயில் உள்ள பொது வீடமைப்பு புளோக்குகளில் வசிக்கும் 40,675 பேரும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரான எட்வின் டோங்கின் ஜூ சியாட் வட்டாரத்தில் உள்ள தனியார் குடியிருப்புப் பேட்டைகளும் ஈஸ்ட் கோஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

மார்ச் 23ஆம் தேதியிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் எட்வின் டோங் அடிக்கடி தலை காட்டி வருகிறார். துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியாட், 63, தவிர முக்கிய அரசியல் முகங்களான பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் ஆகியோரும் ஈஸ்ட் கோஸ்ட்டின் மசெக குழுவில் உள்ளனர். நாடாளுமன்றத் துணை நாயகர் ஜெசிக்கா டான், 58, எஸ்டி இன்ஜினியரிங்கைச் சேர்ந்த புதிய நிறுவனத்தின் தலைவரான ஷேரல் சானும், 49, ஆகியோரும் இதே குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர், வேறு தொகுதிக்கு மாற்றப்படலாம் அல்லது தேர்தலில் போட்டியிடாமல் போகலாம்.

இந்தத் தொகுதியில் எத்தனை அமைச்சர்கள் போட்டியிடுவார்கள் என்று ஏப்ரல் 3ஆம் தேதி துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியாட்டிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, பிரதமர் லாரன்ஸ் வோங்தான் இது பற்றி முடிவெடுப்பார் என்று தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்