தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் சூடுபிடிக்கும் கட்சிகளின் தொகுதி உலா

2 mins read
5da74e9f-4b1c-4059-9eda-684529decf74
(வலம்) கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் ஆகியோர் பிடோக் சவுத் புளோக் 69இல் குடியிருப்பாளர்களைச் சந்தித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் பொதுத் தேர்தலுக்கும் இன்னும் இரண்டு வார இறுதிகளே எஞ்சியுள்ள நிலையில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் குடியிருப்பாளர்களைக் கவர தீவிரமாக முயன்றுவருகின்றனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி காலை பிடோக் வட்டாரத்தில் உள்ள வெவ்வேறு சந்தைகளிலும் காப்பிக் கடைகளிலும் உத்தேச வேட்பாளர்கள் மக்களைச் சந்தித்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

கடுமையான போட்டியை எதிர்நோக்கும் குழுத்தொகுதிகளில் ஒன்றான ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

இப்போதைக்கு மக்கள் செயல் கட்சியின் டாக்டர் மாலிக்கு ஓஸ்மான் பார்த்துக்கொண்ட சிக்லாப் தொகுதியில் புதுமுகம் ஹஸ்லினா அப்துல் ஹலிம் நிற்கவிருக்கிறார்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் மரின் பரேட் குழுத்தொகுதியிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு மாற்றப்படுகிறார்.

துணைப் பிரதமர் ஹெங் சுவி கியெட் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது ஓய்வுபெறுவாரா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது.

பிடோக் குடியிருப்பாளர்களிடம் பேசிய டாக்டர் மாலிக்கி, திரு டோங்கை அணியின் தலைவர் என்று அறிமுகப்படுத்தினார். மரின் பரேட் குழுத்தொகுதியில் உள்ள திரு டோங்கின் ஜூ சியெட் தொகுதி ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமைச்சர்களே குழுத்தொகுதி அணியின் தலைவர்கள், அதில் துணைப் பிரதமர் ஹெங்கும் அடங்குவார்,” என்றார்.

பாட்டாளிக் கட்சியும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான குழுவை இன்னும் அறிவிக்கவில்லை.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஈஸ்ட் கோஸ்ட்டில் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சியின் 47 வயது திரு கென்னத் ஃபூவுடன் பிடோக் சவுத் புளோக் 16இல் 42 வயது வழக்கறிஞர் அங் பூன் யாவ் காணப்பட்டார்.

2020ஆம் ஆண்டு பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி நிக்கோல் சியா, திரு டெரன்ஸ் டான், திரு அப்துல் ‌‌ஷரிஃப் அபூ கஸிம், திரு கென்னத் ஃபூ, திரு டைலன் டான் ஆகியோர் போட்டியிட்டனர். அவர்கள் 46.61 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றனர்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி குடியிருப்பாளர்கள் அக்கறைக்குரிய விவகாரங்களைக் கட்சியின் சமூக ஊடகத் தளங்கள் வழி பகிர்ந்துகொள்ளும்படி பாட்டாளிக் கட்சி அறிவுறுத்தியதாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்