தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோலுக்கு பூசும் களிம்பில் அளவுக்கதிக நச்சுத்தன்மை: ஹெச்எஸ்ஏ

1 mins read
779aa409-7eac-44e7-b8a5-142f82d262b3
இருவர் இப்பொருளைப் பயன்படுத்தியதன் விளைவால் பாதிப்படைந்துள்ளனர். இவைபோன்ற மொத்தம் 4 பொருட்களில் நச்சுத் தன்மை கண்டறியப்பட்டுள்ளது. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

எக்சிமா எனப்படும் தோல் அரிப்புப் பிரச்சினைக்கு தடவப்படும் களிம்பில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 430 மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த கலவை இருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் (ஹெச்எஸ்ஏ) கண்டறிந்துள்ளது.

‘இயுசிமா கான்ஃபிடன்ஸ் ரிவைவல் கிரீம்’ போன்ற உடல் பருமனைக் குறைக்க உதவும் வேறு 3 களிம்புகளில் தடைசெய்யப்பட்ட அல்லது அளவுக்கு அதிக ஆற்றல் கொண்ட கலவைகள் இருந்ததாக ஆணையம் அறிவித்துள்ளது. இணையத்தில் விற்பனையாகும் இவை மலேசியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்டுத்துவோர் உடனடியாக மருத்துவரை பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்