தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜிஎஸ்டி ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒரே மாதிரியானவையல்ல: நல்லகருப்பன்

1 mins read
ff27c814-4e54-4eb8-a10c-8932329c08ba
சுவா சூ காங் குழுத்தொகுதி மக்களிடம் ஆதரவு திரட்டும் வேட்பாளர் நல்லகருப்பன் (இடமிருந்து இரண்டாவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொருள், சேவை வரியைப் பொறுத்தமட்டில் பற்றுச்சீட்டுகள் தற்காலிகமானவை என்றும், அவ்வரி பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒரே மாதிரியானவையல்ல என்றும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர் நல்லகருப்பன் கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

திரு நல்லகருப்பன் உட்பட, சுவா சூ காங் குழுத்தொகுதிக்கான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) கியட் ஹாங் சந்தையில் தொகுதி உலா மேற்கொண்டனர்.

சனிக்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள குடும்பங்கள் நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளின் ஆதரவுடன் ஏழு விழுக்காட்டுக்கும் குறைவான வரியைச் செலுத்துவதாகப் பிரதமர் வோங் கூறியதற்குத் திரு நல்லகருப்பன் பதிலளித்தார்.

தொகுதி உலாவின்போது வேட்பாளர்கள் அபாஸ் கஸ்மானி, வெண்டி லோ, நல்லகருப்பன், லாரன்ஸ் பெக் நால்வரும் குடியிருப்பாளர்களுடன் உரையாடினர்.

நாடாளுமன்றத்தில் அதிகமான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் இருப்பது பன்னாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்குச் சிங்கப்பூரின் மீதுள்ள நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் எனும் பிரதமர் வோங்கின் கருத்து பழைமையானது என்று தெரிவித்தார் வழக்கறிஞரான திருவாட்டி லோ.

“இவ்வகைக் குழு மனப்பான்மையை உடைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவதற்கு இதுவும் முக்கியக் காரணம்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்