பாலியல் ரீதியான தவறான நடத்தை தொடர்பில் எட்டு புகார்களை ஜனவரி 1ஆம் தேதிக்கும் ஜூன் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டதாகச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட பாலியல் ரீதியானத் தவறான நடத்தைக்கான அரையாண்டு அறிக்கையில் தெரிவித்தது.
அந்த தவறான நடத்தையில் மூன்று பேர் ஈடுபட்டதாகவும் அதில் ஒரு மாணவரைப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் என்யுஎஸ் அதில் குறிப்பிட்டது.
மேலும், அந்தப் பாலியல் தொடர்பான புகாரில் பல்கலைக்கழகப் பணியாளர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் அது கூறியது.
அந்த எட்டு புகார்களின் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன என என்யுஎஸ் தெரிவித்தது.
பல்கலைக்கழகத்திடம் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்தும் அது குற்றம் புரிந்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
அத்தகைய பாலியல் ரீதியான நடத்தையைப் பல்கலைக்கழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உறுதிபடுத்தவும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்திலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

