தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியே இறந்த மூதாட்டி; வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது

1 mins read
dd1eeec4-19ba-4d2c-a670-d85671137b75
மிகவும் கடுமையான துர்நாற்றம், வீட்டுக்கு முன்னிருந்த நடைபாதைவரை பரவியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். - படம்: ஷின்மின் நாளிதழ்

சாங்கியிலுள்ள மூவறை வீடு ஒன்றில் 69 வயது மூதாட்டி இறந்து காணப்பட்டார்

சில நாள்கள் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் சிலர் வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டதாக அந்த வீடு உள்ள புளோக்கில் வசிக்கும் 20 வயது திரு ஹோங், ஷின் மின் டெய்லி நியூஸ் நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அந்த வீட்டுக்குள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விவரம் பிறகுதான் தெரிந்துகொண்டதாகத் திரு ஹோங் கூறினார்.

மிகவும் கடுமையான துர்நாற்றம், வீட்டுக்கு முன்னிருந்த நடைபாதைவரை பரவியதாக அவர் கூறினார்.

“எவரிடமும் பழக்கம் வைத்துக்கொள்ளவில்லை. தனியாக வசிப்பதாக நம்பப்படும் அந்த மூதாட்டி, எவருடனும் அதிகம் பேசுவதில்லை,” என்றார் திரு ஹோங்.

“பிறருடன் கலந்து பழக விருப்பமற்றவர். அக்கம் பக்கத்தாருடன் அதிகம் பேச மாட்டார்,” என்று அவர் கூறினார்.

மாண்ட மூதாட்டி வீட்டின் சன்னல்களும் கதவுகளும் அடைத்தே இருக்கும் என்று கூறிய மற்றோர் அண்டை வீட்டாரான திருவாட்டி லியாவ், அண்மை காலமாக அந்த மூதாட்டி காணப்படவில்லை என்று கூறினார்.

ஒரு வாரமாக வீசிய தூர்நாற்றம், கெட்டுப்போன உணவிலிருந்து வந்ததாக எல்லோரும் நினைத்ததால் யாரும் எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்