தங்கைக்கு பாலியல் துன்புறுத்தல்: அண்ணணுக்கு சிறை, பிரம்படி

2 mins read
c388ae4f-b9aa-41b9-8682-e854c256a23f
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுமிக்கு மேலும் இரண்டு தங்கைகள் உள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நான்கு சகோதரர்கள் அவர்களின் தங்கைக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளனர்.

சகோதர்களில் மூத்தவரான 23 வயது நபர் மீது மே 20ஆம் தேதி (திங்கட்கிழமை) குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு தற்போது 14 வயது என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்தப் பெண் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை துன்புறுத்தப்பட்டுள்ளார். அந்தக் காலகட்டத்தில் அந்த பெண்ணின் வயது 8க்கும் 12க்கும் இடையில் இருந்தது.

தண்டனை விதிக்கப்பட்ட மூத்த சகோதரர் 2019ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சிறுமியை துன்புறுத்தியுள்ளார்.

நான்கு சகோதரர்களில் தற்போது மூத்த சகோதரருக்கு மட்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு சகோதரர்கள் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இருவரும் சீர்திருத்த பயிற்சிக்கு ஏற்றவர்களா என்பது குறித்து ஆராயாப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஆக இளையவர் 18 வயது ஆடவர். அவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தும் துன்புறுத்தியும் உள்ளார்.குற்றம் செய்த போது அந்த நபருக்கு 13 முதல் 16 வயது இருந்தது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆக இரண்டாவது இளையர் 20 வயது ஆடவர். அந்த நபர் குற்றம் செய்த போது அவருக்கு 16 முதல் 17 வயது இருந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட இரண்டாவது மூத்த சகோதரின் தற்போதைய வயது 22. அவர் மே 21 (செவ்வாய்க்கிழமை) குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுமிக்கு மேலும் இரண்டு தங்கைகள் உள்ளனர்.

பாலியல் ரீதியாக சகோதரர்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமி தனது பள்ளி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

அதன் பின்னர் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்