பொதுத் தேர்தலில் முதன்முறையாக வேட்பாளர்களைத் தவறாக சித்தரிக்கும் போலியான, திரிக்கப்பட்ட இணையப் பதிவுகளைத் தடைசெய்யும் புதிய சட்டத்தைத் தேர்தல் துறை (ஏப்ரல் 15) அமல்படுத்தியுள்ளது.
பிரசாரத்துக்கான வழிகாட்டிகளை அறிவித்த தேர்தல் துறை, இணையப் பிரசாரம் தொடர்பிலான விதிமுறைகள் தேர்தலில் களமிறங்குவதற்கான முன்பணத்தைச் செலுத்திய உத்தேச வேட்பாளர்களைப் பாதுகாக்கும் என்றது.
ஏப்ரல் 23ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பிரசாரக் காலம் தொடங்கும். 2ஆம் தேதி வரை ஓய்வு நாளை அடுத்து மே 3ஆம் தேதி சிங்கப்பூரர்கள் வாக்களிக்கச் செல்வர்.
சிங்கப்பூரர்கள் தேர்தலுக்குத் தயாராகிவரும் வேளையில் பிரசாரத்துக்கான சில வழிகாட்டிகள்:
- பிரசாரக் காலத்துக்கு முன் புதிய பதாகைகளுக்கும் கட்சிக் கொடிகளுக்கும் இடமில்லை
- ஏப்ரல் 23ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் முடியும்வரை புதிய பதாகைகளையும் கட்சிக் கொடிகளையும் பொது இடங்களில் வைக்க அனுமதி இல்லை
- தொகுதி உலாக்கள் மேற்கொள்வதோடு வேட்பாளர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதி உண்டு. குடியிருப்பாளர்களைச் சந்திக்க அவர்கள் காவல்துறையின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை.
- வேட்பாளர்கள் சமூக ஊடகங்கள், இணையப் பக்கங்கள், வளையொலிகள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் பிரசாரங்களை மேற்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
- அனைத்து பிரசாரங்களும் ஓய்வு நாளான மே 2ஆம், 3ஆம் தேதிகளில் நிறுத்தப்படவேண்டும். இணையத்தில் பதிவிட்ட பிரசார பதிவுகளை மறுபடியும் பகிரவோ விளம்பரப்படுத்தவோ கூடாது.
- சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாதோர் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதில்லை.
- வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது வெளிநாட்டில் உள்ளோரிடமிருந்து ஆதரவை நாடக்கூடாது.