உட்லண்ட்சில் வாகன நிறுத்துமிடத்திற்கு வெளியே மின்சார கார் தீப்பிடித்தது

உட்லண்ட்சில் வாகன நிறுத்துமிடத்திற்கு வெளியே மின்சார கார் தீப்பிடித்தது

1 mins read
3e2af5af-890e-44f5-9bd9-f4f8d3186ccc
ஓட்டுநர் மற்றும் முன் இருக்கைப் பயணிக்கு இடையேயான இடைவெளியில் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது. - படம்: சிங்கப்பூரா சேனல்/ஃபேஸ்புக்
multi-img1 of 2
Google News Preferred Icon

செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) காலை, உட்லண்ட்சில் உள்ள விஸ்டா பாயிண்ட் அருகே ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மின்சார வாகனம் தீப்பிடித்தது.

காலை சுமார் 10.10 மணியளவில், உட்லண்ட்ஸ் டிரைவ் 44, புளாக் 548ல் உள்ள பல மாடி வாகன நிறுத்துமிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காரின் உட்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அது கூறியது.

தீயணைப்பு வீரர்கள் நீரைப் பீய்ச்சியடிக்கும் சாதனம் மூலம் தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

“தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைவிபத்துமின்சார கார்

தொடர்புடைய செய்திகள்