பள்ளிவாசல் நன்கொடைப் பணத்தைக் கையாடியதாக ஊழியர்மீது குற்றச்சாட்டு

பள்ளிவாசல் நன்கொடைப் பணத்தைக் கையாடியதாக ஊழியர்மீது குற்றச்சாட்டு

1 mins read
a04064b7-3f9c-4b7f-a6cf-643685a8b7fe
முகம்மது முஹைமின் முகம்மது சுலைமான்மீது புதன்கிழமை நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

செங்காங்கில் உள்ள அல்-மவத்தா பள்ளிவாசலில் பணிபுரிந்த மூத்த நிதி நிர்வாகி ஒருவர், பள்ளிவாசலின் நன்கொடைப் பெட்டிகளிலிருந்து $14,000க்கும் அதிகமான தொகையைக் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 42 வயது முகம்மது முஹைமின் முகம்மது சுலைமான்மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 12) நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் கடந்த பிப்ரவரி 6க்கும் மே 15க்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தபட்சம் 15 முறை இக்குற்றச்செயலில் அவர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கண்டறிந்ததும், பள்ளிவாசல் நிர்வாகம் உடனடியாகக் கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளை ஆய்வுசெய்து, காவல்துறையிடம் புகார் அளித்ததோடு, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திற்கும் (முயிஸ்) தகவல் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து முஹைமின் தனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். சமூகத்தினர் தங்களிடம் ஒப்படைக்கும் நன்கொடைகளையும் நிதியையும் பாதுகாப்பதை முதன்மைப் பொறுப்பாகக் கருதுவதாக முயிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த மே 16ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் கிடைத்ததாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது. தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முஹைமினின் வழக்கு செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திருட்டுகுற்றச்சாட்டுகையாடல்