புளூஎஸ்ஜி கட்டமைப்பை முறைகேடாகப் பயன்படுத்திய ஊழியருக்குச் சிறை

1 mins read
159cdc64-d70b-4476-b1f8-336590223180
முஹம்மது ஃபத்லி அனுவார் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) அரசு நீதிமன்றங்களுக்குச் சென்றிருந்தார். - படம்: எஸ்பிஎச்

வாகன வாடகை நிறுவனமான புளூஎஸ்ஜியின் ஊழியர் ஒருவர் நண்பரின் கணக்கை 150 முறை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். கணக்கின் மூலம் அவர் வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார். ஓட்டுநர் உரிமம் இல்லாத அவர் வாகனத்தை ஓட்டிச்சென்றிருக்கிறார்.

முஹம்மது ஃபத்லி அனுவார், 24, புளூஎஸ்ஜியின் தரவுத்தளக் கட்டமைப்பை எட்டு முறை தவறாகப் பயன்படுத்தி, வாகனங்கள் எடுக்கப்பட்ட நேரத்தைப் பூஜ்ஜியம் என்று மாற்றிவிட்டார். அவர் வாகனத்தை இலவசமாக ஓட்டிச்செல்ல அது வழிவிட்டது.

புதன்கிழமை (ஆகஸ்ட்) அவருக்குக் கிட்டத்தட்ட எட்டரை மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு வாகன உரிமம் பெறுவதிலிருந்தும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை விதித்த நீதிபதி, வாகனங்களை 150 முறை உரிமமின்றி ஓட்டியதன் மூலம் ஃபத்லி சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார்.

அத்தகைய குற்றங்களைக் கண்டுபிடிப்பது சிரமம் என்று நீதிபதி கூறினார்.

அவரிடம் காப்புறுதி இல்லை என்பதையும் நீதிபதி சுட்டினார்.

ஃபத்லியின் சிறைத்தண்டனை அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்