தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெட்ஸ்டார் ஏஷியா ஊழியர்களுக்கு வேலை தர 40 முதலாளிகள் தயார்

2 mins read
90c7aa8a-8004-4ff6-bd02-c59f40147629
ஜூன் 18ல் என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், ஜெட்ஸ்டார் ஊழியர்களைச் சந்தித்தார். - படம்: இங் சீ மெங்/ஃபேஸ்புக்

விமானத்துறை, ஏரோஸ்பேஸ், போக்குவரத்து, உபசரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 முதலாளிகள் ஒன்றிணைந்து ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்திலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டோருக்கு வேலை தேடித் தரும் முயற்சியில் ஒன்றிணைந்துள்ளனர்.

சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தில் உள்ள வேலைச் சந்தை, எல்லா ஜெட்ஸ்டார் ஏஷியா பணியாளர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்தை ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை செயல்படும்.

450க்கும் அதிகமான  வேலைகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விமானிகள், விமானப் பணியாளர்கள், வாடிக்கையாளர் சேவை,  பாதுகாப்பு தரநிலையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட வேலைகள் இருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஜூன் 18ஆம் தேதி தெரிவித்தது.

சிங்கப்பூரிலிருந்து இயங்கி வந்த ஜெட்ஸ்டார் ஏஷியா, 20 ஆண்டுகளுக்கு அதிகமான செயல்பாட்டுக்குப் பிறகு மூடப்படும் என்று ஜூன் 11ல் தெரிவித்தது.

ஏழு வாரங்களுக்குச் சிங்கப்பூருக்கு வெளியிலுள்ள விமானச் சேவைகளை நிறுவனம் தொடரும். படிப்படியாக சேவைகளைக் குறைத்து அந்நிறுவனம் ஜூலை 31ஆம் தேதி முற்றிலும் இயங்குவதை நிறுத்தும்.

விமானச் சேவை மூடுப்படும்போது சிங்கப்பூரில் 500க்கும் அதிகமான பணியாளர்கள் தங்கள் வேலையிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்படுவர்.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஜெட்ஸ்டார் பணியாளர்களுக்கு புதிய வேலைகளை உருவாக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் தெரிவித்தது. இதில் விமானிகளுக்கு 100 வேலைகளும் விமானச் சிப்பந்திகளுக்கு 200 வேலைகளும் அடங்கும்.

ஜூன் 18ல் வெளிவந்த ஃபேஸ்புக் பதிவில், வேலைச் சந்தையை நேரில் சென்று பார்த்ததாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் பேசியதாகவும் ஊழியரணித் தலைவர் இங் சீ மெங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்