சிங்கப்பூரில் ஓன்-புளோக் எனப்படும் பழைய கட்டடங்களை ஒட்டுமொத்தமாக விற்கும் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர சட்டத்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மூப்படையும் குடியிருப்பு வட்டாரங்களைப் புதுப்பிக்க அந்த மாற்றங்கள் தேவை என்றும் பல காலமாக அவற்றுக்குக் காத்திருந்ததாகவும் சொத்துச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, விற்பனைக்கு வழிவிடும் உரிமையாளர் கையெழுத்துகளைப் பெறுவதற்கான காலம் குறைவது குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நாடாளுடன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கட்டடங்களை மொத்தமாக விற்க 80 விழுக்காட்டுக்குக் குறைவான உரிமையாளர்களின் ஒப்புதல் இருந்தால் போதும்.
எனினும், அதற்கு வகைசெய்ய ஒட்டுமொத்த விற்பனைக் குழுக்கள் (சிஎஸ்சி) ஆறு மாதங்களில் கையெழுத்துகளைப் பெறவேண்டும். தற்போது அதற்கு 12 மாதங்கள் வழங்கப்படுகின்றன.


