டான் டோக் செங் மருத்துவமனை நோயாளிகளுக்கு முப்பரிமாண தயாரிப்பு அடிப்படையிலான இரண்டு கண்டுபிடிப்புகள் உதவி வருகின்றன.
விபத்துகளில் விரல்களை அல்லது கபாலப் பகுதியை இழந்துவிட்ட நோயாளிகள், அந்தக் கண்டுபிடிப்புகளால் பலனடைகிறார்கள். ரசல் கோ, 21, என்ற பொறியியல் படிப்பு மாணவர் 2022 அக்டோபரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் தன் இரண்டு விரல்களை இழந்துவிட்டார்.
மோதிர விரலை மருத்துவர்கள் மீண்டும் பொருத்திவிட்டார்கள். ஆனால் சுண்டுவிரலைப் பொருத்த முடியவில்லை.
முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு செயற்கை விரலைப் பொருத்த அந்த மாணவர் தகுதி பெற்று இருக்கிறார். அந்த விரல் சனிக்கிழமை (ஏப்ரல் 15) ஊடகங்களுக்குத் திறன் விளக்கம் மூலம் காட்டப்பட்டது (படம்). செயற்கை விரலைப் போல் அல்லாமல் முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் விரலை நீட்டி, மடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, அந்த மருத்துவமனையில் கபாலப் பகுதியும் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த முப்பரிமாண தொழில்நுட்ப செயற்கை விரல் எடை குறைவானதாக இருக்கும். அவற்றின் செயல்பாடுகள் அதிகம். அதற்கு $500 செலவாகும்.
நோயாளிகளுக்கு அது மிகவும் பொருத்தமாக உள்ளது என்று இந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பெர்னிஸ் ஹெங் கூறினார்.

