வர்த்தக வளர்ச்சித் திட்டம் மே 2025 வரை நீட்டிக்கப்படுகிறது

வர்த்தக வளர்ச்சித் திட்டம் மே 2025 வரை நீட்டிக்கப்படுகிறது

1 mins read
c98d699c-a312-41ca-afe8-3dafc0a7444e
கண்காட்சிக் கூடத்தில் நிறுவனங்களின் இயக்குநர்களைச் சந்தித்துப் பேசும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான வர்த்தக வளர்ச்சிக்கான பங்குதாரர் திட்டத்தை, ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ (EnterpriseSG) 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்துள்ளது.

சிறிய நடுத்தர நிறுவன நிலையங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டம், இதுவரை 250க்கும் அதிகமான நிறுவனங்கள் அவற்றின் வர்த்தக வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த உதவியுள்ளது.

வர்த்தக வளர்ச்சிக்கான பங்குதாரர் திட்டம் 2020ஆம் ஆண்டு அக்டோபரில் முன்னோடித் திட்டமாக, குறிப்பிட்ட ஒருசில சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குக் கைகொடுத்தது.

இனி, கூடுதல் காலத்துக்கு இத்திட்டம் நீட்டிக்கப்படுவதால் மேலும் பல சிறிய நடுத்தர நிறுவனங்கள் ஆலோசகர்களின் வழிகாட்டலில் தனிப்பட்ட உதவியைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருவாய் வளர்ச்சி தொடர்ச்சியாக இருந்ததைக் காட்டும் பதிவுகளைக் கொண்டிருத்தல், விரிவுபடுத்துவதற்கான வர்த்தகத் திட்டங்களைக் கொண்டிருத்தல், வர்த்தக உருமாற்ற இலக்குகளை வகுத்தல் போன்ற கூறுகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.

மேலும், திட்டத்தின் மூலம் முழு நிதியாதரவையும் நிறுவனங்கள் பெறலாம்.

திட்டம் நீட்டிக்கப்படுவது குறித்து இவ்வாண்டின் சிறிய நடுத்தர நிறுவன நிலைய மாநாட்டில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் ஜூலை 31ஆம் தேதி அறிவித்தார்.

சிங்கப்பூரில் தற்போது ‘எண்டர்பிரைஸ்எஸ்ஜி’ அமைப்பின்கீழ் 10 சிறிய நடுத்தர நிறுவன நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் ஐந்து வர்த்தகச் சங்கங்களும் சபைகளும் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்